

கோலாலம்பூர் ஜூன் 30-
மிண்டாஸ் எனப்படும் மலேசியா இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு கூட்டம் இன்று கோலாலம்பூர் சீன அசெம்பளி மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் சுதந்திரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
மைக்கின் தேசிய உதவித் தலைவர் திருநாவுக்கரசு கூட்டத்தை தொடக்கி வைத்தார்.
சிகை அலங்கார தொழில் துறைக்கு அந்நிய தொழிலாளர் இல்லாமல் பல ஆண்டுகளாக நாங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம் என்று சங்கத்தின் செயலாளர் ராஜசேகரன் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண போராடி வரும் மனிதவள அமைச்சர் சிவகுமாரின் முயற்சி மிக விரைவில் வெற்றிபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


