
எதிர்வரும் ஜூலை 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, மேருவில் அமைந்துள்ள கிள்ளான் பேராட் (Klang Parade) முதல் தளத்தில் மலேசிய தமிழர் குரல் சிலாங்கூர் மாநிலம், கிள்ளான் பொது மருத்துவமனை இரத்ததான வங்கி இணை ஏற்பாட்டில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யுமாறு அன்புடன் ஏற்பாட்டு குழுவினர் கேட்டு கொள்கின்றனர்.
“தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்” பல உயிர்களை காப்பாற்ற நம் உடலில் இருந்து தானம் செய்யும் சிறிது இரத்தம் மிக பெரிய பயனாகும்.
இந்த இரத்ததான முகாமிற்கு தங்களின் வற்றாத ஆதரவு கிடைக்கும் என்று ஏற்பாட்டு குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் தகவலுக்கு
திரு. கனேசன் – 013-254 1264 அல்லது
திரு. சிவராம் – 011- 3317 2729 ஆகியோரை அழைக்கலாம்.

