5 லட்சம் தொழிலாளர்கள் – சிறுநீரக நோயாளிகளை பாதுகாக்கும் கிள்ளான் Perkeso – வின் சேவை தூய்மையானது! மனிதவள அமைச்சர் சிவகுமார் பாராட்டு

கிள்ளான், ஜூலை 6-
கிள்ளான் மாவட்டத்தில் 73,944 முதலாளிகள், 5 லட்சத்து 14,620 தொழிலாளர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளை பாதுகாக்கும் கிள்ளான் சொக்சோ நிறுவனத்தின் சேவை மிகவும் தூய்மையானது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் புகழாரம் சூட்டினார்.

புதிய கிள்ளான் PERKESO அலுவலகம் மற்றும்
PUSAT DIALISIS எனப்படும் சிறுநீரக மையத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

இந்த
புதிய கிள்ளான் Perkeso அலுவலகம் மற்றும் டயாலிசிஸ்.
மையத்தின் திறப்பு விழா மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

ஏனெனில் இது ஒரு தூய முயற்சியைக் காட்டுகிறது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

டயாலிசிஸ் மூலம் தொடர்ந்து மக்களின் நலனைப் பாதுகாத்து பாதுகாக்க வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் மக்களின் சமூக பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்துங்கள் என்று கிள்ளான் சொக்சோ நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

கிள்ளான் சொக்சோ டயாலிசிஸ் மையத்தின் நிர்வாகத்தை
Nephrocare Management Sdn Bhd (NMSB) நிர்வாகம் செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.

புதிய கிள்ளான் சொக்சோ சமூக அலுவலகத்தைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

சொக்சோ சந்தாரர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கு இந்த இடம் வசதியானது மற்றும் பொருத்தமானது.

Klang சொக்சோ நிறுவனம் மக்களுக்கு சேவையை மேலும் விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதும் பாராட்டுக்குரியது.

கிள்ளான் சொக்சோ நிறுவனம்
மொத்தம் 73 ஆயிரத்து 944 முதலாளிகள் மற்றும் 5 லட்சத்து 14 ஆயிரத்து 620 தொழிலாளர்கள்
இந்த அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ளது என்றார் அவர்.

இன்றைய நிகழ்ச்சியில் சொக்சோ நிறுவனத்தின் தலைவர்
DATO’ SRI SUBAHAN KAMAL, சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி
DATO’ SRI DR. MOHAMMED AZMAN AZIZ
MOHAMMED, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் சொக்சோ கிளை அலுவலக நிர்வாகி மோகனதாஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles