42 விழுக்காடு தொழிலாளர்கள் உடல் பருமனால் பாதிப்பு! நீரிழிவு நோய் கவலைக்குரிய நிலையில் உள்ளது! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கிள்ளான் , ஜூலை 6-
சொக்சோ நிறுவனத்தின் மருத்துவப் பரிசோதனை சிகிச்சை ஆய்வில் தொழிலாளர்களின்
உடல்நலப் பிரச்சினைகள் கவலைக்குரிய வகையில் உள்ளதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.

இப்போது நீரிழிவு உட்பட பல நோய்கள்
ஒரு தீவிரமான மற்றும் கவலைக்குரிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது.

2022 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில்
நோய் எண்ணிக்கை 74 விழுக்காடு பங்களிப்பதைக் காட்டுகிறது.

மேலும் நோயினால் ஒவ்வொரு ஆண்டும் மரண எண்ணிக்கை 41 விழுக்காடு பதிவாகியுள்ளது.

நாட்டில் சொச்சோ நிறுவனத்தின் வருடாந்திர ஹெல்த் ஸ்கிரீனிங் (மருத்துவ பரிசோதனை) திட்டத்தின் ஆய்வில் 42 சதவீத தொழிலாளர்கள் உடல் பருமன் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

14.1 சதவீத தொழிலாளர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது.

27.9
61.2 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது.

இது அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையாக உள்ளது.

மலேசியாவில் நீரிழிவு நோய் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது என்று மலேசிய டயாலிசிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இது மிகவும் கவலைக்குரிய வகையில் இருப்பதாக இன்று கிள்ளானில் புதிய சொக்சோ அலுவலகம் மற்றும் சிறுநீரக சிகிச்சை மையத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்ச்சியில் சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸான், கிள்ளான் சொக்சோ கிளை நிரவாகி மோகன்தாஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles