
[1:53 PM, 10/12/2022] Mannan: 5 ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதை தடுக்கும் வகையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளை பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீறியுள்ளதால் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதை தடுத்து நிறுத்த அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அவர் தமது வழக்கு மனுவில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தை பிரதிவாதியாக
குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும்படி பேரரசரை இஸ்மாயில் சப்ரி கேட்டுக்கொண்டது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 40 ஆவது ஷரத்தின் உட்பிரிவு (1) மற்றும் (1A) கீழ் எதிரானது என நீதிமன்றம் பிரகடனம் செய்ய வேண்டுமென தமது வழக்கு மனுவில் சார்ல்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[1:54 PM, 10/12/2022] Mannan: News 5

