

கப்பளா பத்தாஸ் ஜூலை 14-
மலேசியா மிகவும் திறமையான தொழிலாளர் சக்தியாக மாறி வரும் வேளையில்
எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
திறன் மேம்பாட்டு நிதி கழகம் (PTPK) மற்றும் டேலாண்ட் கோர்ப் ஏற்பாட்டில் இன்று பினாங்கு கப்பளா பத்தாஸில் நடைபெற்ற விழாவில் மனிதவள அமைச்சர் சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நாட்டில் அதிக முதலீடுகள் மூலம்
நமது மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இருப்பினும், முதலீட்டை ஈர்க்க நாம்
தரம் மற்றும் மிகவும் திறமையான பணியாளர்கள் போட்டியிடக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும்
முதலாளிகள்
தங்கள் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும்.
இது நிறுவனத்தை முன்னேற்ற பெரிதும் உதவும்..
எதிர்காலத்தில் 50% ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும். அதன் மூலம் திறமையான தொழிலாளர்களை உருவாக்க முடியும் என்று அவர் சொன்னார்.
இன்றைய விழாவில் திறன் பயிற்சி நிதி திட்டத்தின் கீழ் வேலை மற்றும் முதலாளி விருது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி மற்றும் டேலாண்ட் கோர்ப் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி தோமஸ் மேத்தியூ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

