மூளை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட சரவணக்குமாருக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் விரைந்து உதவிகளை வழங்கினார்

ஜெலாப்பாங் ஜூலை 15-
மூளை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு லோரி டிரைவரான சரவணக்குமார் இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறார்.

பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள புஞ்சாங் ஜெலாப்பா வட்டாரத்தில் வசித்து வந்த இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.

லோரி டிரைவராக சரவணகுமார் வேலை செய்த போது அவரின் வருமானத்தை நம்பி குடும்பம் இருந்தது.

ஆனால் இப்போது மூளை பக்கபத நோயினால் சரவணகுமார் பாதிக்கப்பட்டதால் அவரின் குடும்பம் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கிறது.

இந்நிலையில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான சிவகுமார் மூலம் இவரின் குடும்பத்திற்கு உதவிகள் விரைந்துள்ளன.

மனிதவள அமைச்சர் சிவக்குமாரை பிரதிநிதித்து ஜெலாப்பாங் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு அதிகாரி சுதாகர் சுப்பிரமணியம் இன்று சரவணக்குமார் இல்லத்திற்கு விரைந்து தேவையான உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles