களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எனது உரை திரிந்து கூறப்படுகிறது! அகமட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்ற ம இகா தேசிய பேரவையின் நான் பேசிய உரை இப்போது திரிந்து கூறப்படுகிறது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தமது நற்தோற்றத்தைக் கெடுப்பதற்காக, மஇகா பொதுப் பேரவையில் தாம் பேசியதை எதிர்கட்சியினர் திரித்து கூறி வருகிறார்கள்..

15-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டால், அரசியல் நோக்கம் கொண்டு ககுற்றச்சாட்டுகள், நமது தலைவர்கள் மீது சுமத்தப்படக் கூடும்.

இதுவே எதிர்கட்சியுடன் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என சிலர் நினைக்கின்றனர்.

இதனால் தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிலர், கட்சித் தாவியதாக கூறினேன் என்று அவர் சொன்னார்.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டால் கடந்த தேர்தலை காட்டிலும் நமது நிலை மோசமாகிவிடும் என்று அவர் பேசியது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles