



கோலாலம்பூர் ஆக 19-
மக்களுக்கு நன்மை அளிக்கும் செய்திகளை பகிரும்படி பொது மக்களை மனித குல அமைச்சர் வ. சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
தற்போது டிக் டாக்கில் நெகட்டிவ் செய்திகள் அதிக அளவில் பகிரப்படுகின்றன.
இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனம் தற்போது சிறுநீரக நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களின் மூலம் சிகிச்சை அளித்து வருகிறது.
மக்களுக்கு நன்மை தரக்கூடிய இது போன்ற செய்திகளை தங்களது முகநூலில் பகிர்ந்தால் அதன் மூலம் பல நன்மை அடைவார்கள்.
ஆகவே பொதுமக்கள் நன்மை தரும் கூடிய செய்திகளை அதிகம் பகிரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு நேற்று கோலாலம்பூர் லேக் கிளப்பில் நன்றி நவிலும் விருந்தோம்பல் விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கிய எஸ்.பி.கேர். மருத்துவ குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சத்யா பிரகாஷ் குழுவினருக்கு இந்த நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டது.

