Rawang Bandar county Homes அருள்மிகுஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு அமைச்சர் சிவகுமார் 30,000 வெள்ளி மானியத்தை ஒப்படைத்தார்

புத்ரா ஜெயா ஆக 19-
ரவாங் பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் வட்டாரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு 30,000 வெள்ளி மானியத்தை மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் நேற்று நேரடியாக வழங்கினார்.

ஆலய நிர்வாகத்தின் தலைவர் தனராஜா குப்புசாமி தலையிலான பொறுப்பாளர்கள் இந்த மானியத்தை அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

ரவாங் கன்ட்ரி ஹோம்ஸ் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவும் வகையில் 30,000 வெள்ளி வழங்கப்பட்டதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

வாக்குறுதி அளித்த படி
30,000 வெள்ளி மானியத்தை வழங்கி பேருதவி புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு ஆலயத் தலைவர் தனராஜ் குப்புசாமி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles