மலேசியாவில் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் இன்னும் கவலை அளிக்கும் வகையில் உள்ளன! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், ஆக. 23-
மலேசியாவில் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விபத்து இன்னும் கவலை தரும் வகையில் இருப்பதாக மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று தெரிவித்தார்.

2022 இல் PERKESO க்கு அறிவிக்கப்பட்ட மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 72,149 வழக்குகள் ஆகும்.

இதில் 45.7 சதவீதம் அல்லது 32,976 வழக்குகள் பயண விபத்துக்கள். இவற்றில், தொழில்துறை விபத்துகளால் ஏற்பட்ட 281 இறப்புகளுடன் ஒப்பிடுகையில், பயண விபத்துகளால் 651 இறப்புகள் உள்ளன.

சராசரியாக, ஒரு நாளில் பெர்கெசோவிடம் 3 (மூன்று) தொழில்சார் மரணங்கள் பதிவாகியுள்ளன. 2 (இரண்டு) இறப்புகள் பயண விபத்துக்களால் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் 1 (ஒரு) மரணம் பணியிட விபத்து காரணமாகும்.

மலேசியத் தொழிலாளர்களிடையே ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதில் மனித வள அமைச்சகம் மிகவும் தீவிரமாக உள்ளது.
பல விபத்துக்களினால் குழந்தைகள் தங்களது அன்புக்குரிய பெற்றோரை இழக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக, முதலாளிகள் தங்கள் திறமையான தொழிலாளர்களை இழந்துள்ளனர்.
அதே நேரத்தில் தேசம் அதிக திறன் கொண்ட மனித வளங்களை இழந்ததுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இன்று புத்ரா உலக வாணிப மாநாட்டு மண்டபத்தில் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற
VISION ZERO SEMINAR MALAYSIA 2023 எனும் கருத்தரங்கை நிறைவு செய்து வைத்து உரையாற்றிய போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles