விபத்து தடுப்பு, சுகாதாரம், தொழிலாளர் நல்வாழ்வில் சொக்சோ கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஆக 23-
சொக்சோ எனப்படும் சமூக நல பாதுகாப்பு நிறுவனம் இழப்பீடுகளில் மட்டும் கவனம் செலுத்தவில்லை.

மாறாக
விபத்து தடுப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வு போன்ற பரந்த அளவிலான கவரேஜையும் கொண்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்

உலக புத்ரா வாணிப மையத்தில் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற vision zero seminar Malaysia கருத்தரங்கை நிறைவு செய்து உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்

இந்த கருத்தரங்கின் நோக்கம் நமது பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு கலாச்சாரத்தை வளர்ப்பதாகும்.

விஷன் ஜீரோ என்பது வெறும் கருத்து அல்ல; இது ஒரு தத்துவம். ஒரு அர்ப்பணிப்பு மற்றும் செயலுக்கான அழைப்பு. இது சாலைப் பாதுகாப்பு முயற்சியாக உருவாகியுள்ளது.

போக்குவரத்து தொடர்பான அனைத்து உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களை அகற்ற முயல்கிறது.

இது சமூகப் பாதுகாப்பில் தடுப்புக்கான சக்திவாய்ந்த கருவியாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் துணை அமைச்சர் முஸ்தபா சக்முட், மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

VISION ZERO SEMINAR MALAYSIA 2023 இல் கலந்து கொண்டதற்காக பங்கேற்பாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளுக்கு எனது பாராட்டுக்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மலேசியாவில் சமூகப் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான கூறுகள் உருமாறும் செயல்முறை என்பதை இந்தக் கருத்தரங்கு காட்டுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles