பத்துகாஜா முஸ்லிம் இறப்பு அறக்கட்டளை தொண்டு நிறுவனத்திற்கு அமைச்சர் சிவகுமார் 7,450 வெள்ளி நிதியுதவி

பத்துகாஜா, ஆக. 25-
பத்து காஜா முஸ்லிம் இறப்பு அறக்கட்டளையின் தொண்டு நிறுவனத்திற்கு (Pertubuhan Khairat Kematian Orang-Orang Islam Batu Gajah) மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று 7,450 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
இந்த நன்கொடையானது மூன்று கூடாரங்களை வாங்குவதற்கு உதவி புரிந்துள்ளது.

இந்த அமைப்பு உறுப்பினர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அவர்களுக்கு நிதியுதவி வழங்கி செய்து வரும் அனைத்து சேவைகளையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இந்த அமைப்பு Koperasi Khairat Perak Berhad நிறுவனத்தை நிறுவியுள்ளது, இது வருமானத்தை ஈட்ட பல்வேறு வணிக நடவடிக்கைகளை நடத்துகிறது.

நன்கொடையின் மூலம், அமைப்பின் செயல்பாடுகளை நடத்தவும், அனைத்து உறுப்பினர்களும் பயன்பெறவும் உதவ முடியும் என்று நம்புகிறோம்.


பதுகாஜா முஸ்லிம் இறப்பு அறக்கட்டளையின் தலைவர் Tuan Rahmani bin Mohd Said மற்றும் Koperasi Khairat Perak Berhad கூட்டுறவுத் Tuan Mohaiyiddin Bin Ahmad Suri உட்பட அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles