
புத்ரா ஜெயா ஆக 24-
இந்திய டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்திற்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று 10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
இந்த நன்கொடையானது இந்திய டாக்ஸி, வாடகை கார் ஓட்டுநர்களின் மேம்பாடு மற்றும் நலனுக்கானது.
இந்த நிதி சங்க உறுப்பினர்கள் பெரிதும் உதவும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவிட் 19 தாக்கத்தினால் டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு இந்திய டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்திற்கு இந்த மானியத்தை வழங்கியதாக அவர் சொன்னார்.

