



கோலாலம்பூர் ஆக 25-
மலேசியாவில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்களின் நலன்களை காக்கும் வகையில் அமைக்கப்பட்ட மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் 50,000 வெள்ளி மானியம் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இரண்டு தவணைகளாக இதன் தலைவராக செ.வே. முத்தமிழ் மன்னன் இருந்து சேவையாற்றினார்.
இப்போது மக்கள் ஓசை ஆசிரியர்களில் ஒருவரான கு. தேவேந்திரன் தலைவராக இருந்து திறம்பட சங்கத்தை வழி நடத்தி வருகிறார்.
உறுப்பினர்களின் பெற்றோர்கள் மரணம் அடைந்தால் ஆயிரம் வெள்ளி மரண சகாய நிதி, மருத்துவ சிகிச்சை நிதி, தீபாவளி வெகுமதி, குடும்பத் தின விழா போன்ற நிகழ்வுகளை சங்கம் நடத்தி வருகிறது.
சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் பேருதவி புரிய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் கு. தேவேந்திரன் கோரிக்கை முன் வைத்தார்.
இந்நிலையில் நேற்று மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களை சந்தித்து உரையாடி அமைச்சர் வ சிவகுமார் 50,000 வெள்ளியை வழங்குவதாக அறிவித்தார்.
மேலும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு வழங்குவேன் என்றும் அறிவித்தார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பார்த்தீபன், உதவித் தலைவர்கள் இரா. கோபி, தயாளன் சண்முகம், பொருளாளர் கிறிஸ்ட் சின்னப்பன், துணை செயலாளர் குணா, ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பி. மலையாண்டி, புவனேஸ்வரன், சங்கீதா, சாந்தா, ரவி முனியாண்டி, தர்வின், பவளசெல்வன், மூர்த்தி சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி 50,000 வெள்ளி மானியம் வழங்கு முன் வந்திருக்கும் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு சங்கத்தின் தலைவர் கு. தேவேந்திரன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

