
புத்ரா ஜெயா ஆக 26-
உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளுங்கள் என்று மனிதவள அமைச்சு மேற்கொண்டு வரும் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க தொழில் திறன் கல்வியை பயில முன் வரும்படி இளைஞர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது மனித வள அமைச்சின் கீழ் தொழில் மேம்பாட்டுத் திட்டம், TVET தொழில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சித் திட்டம் வழங்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை மலேசியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

