அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் மேகலா

சுப்ரமணியம்-காலஞ்சென்ற வள்ளியம்மாள்தம்பதியின் 3 பிள்ளைகளில் கடைக்குட்டியான மேகலா சுப்ரமணியம்அண்மைய வட மலேசிய பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் அறிவியல் துறையில் ( Data Analysis) முதுகலைப் பட்டம் பெற்றார்.

8 ஆண்டுகளாக தொழில் செய்து கொண்டே இந்த முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டு மேகலா அதனைவெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளார்.

 தற்போது மலேசியாவைத் தளமாக கொண்டசுவிட்சர்லாந்து  நிறுவனமொன்றில் வணிகஆதரவு ஆய்வாளராக  (Business Support Analyst) பணி புரியும் மேகலா சற்றுவித்தியாசமான ஆனால் நன்மைப்  பயக்கும் எதிர்கால திட்டத்தை வைத்துள்ளார்.

இயற்கைத் தோழமை பொருட்களைத் தயாரிக்கும் தொழில்முனைவராக வருவதே இவரின்  இலட்சியம். அதற்கான தொடக்கக் கட்ட ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுப்  பணிகள் நிறைவடைந்துவிட்டன.  மாஸ்டர் படிப்பை மேற்கொண்டதால்இடையில் அத்திட்டத்தை நிறுத்திவைத்துள்ளார். தனது அந்த இயற்கைத்தோழமை தொழில் முயற்சியில் மேகலா வெற்றிப் பெற அவரின் உடன் பிறவா தம்பி தங்கராஜ் கணேசன் வாழ்த்துகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles