
கூச்சிங் ஆக 26-
சரவாக் மாநிலத்திற்கு வருகை புரிந்திருக்கும் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று இருவருக்கு சொக்சோ நிறுவனத்தின் சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவியை வழங்கினார்.
Skim Pencen ilat Perkeso மூலம் பெருங்குடல் புற்றுநோயாளியான ஒருவருக்கு
வாழ்நாள் முழுவதும் மாதாந்திர அடிப்படையில் இலாட் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,973 வெள்ளியை வழங்கினார்.
மேலும் கூடுதல் தேவைக்காக RM 500.00 வெள்ளியும் வழங்கினார்.
நரம்பியல் பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மற்றொருவருக்கு
ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம் மாதாந்திர அடிப்படையில்
RM 1,112 வெள்ளியை வழங்கினார்
மேலும் கூடுதல்
பராமரிப்புக்காக RM 500.00 வெள்ளியும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

