
சிலாங்கூர் மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் புதிய தலைவராக பினாங்கைச் சேர்ந்த டத்தோ கணேசன் காளிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர்களாக கென்னத் கண்ணா, பத்துமலை மற்றும் குணசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக கென்னத் கண்ணா பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் புதிய செயலாளராக குணசேகரன், பொருளாளராக இமாச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
உதவித் தலைவர்களாக சுரேஷ்குமார் மற்றும் மோகன் தேர்வு செய்யப்பட்ட வேளையில் உச்ச மன்ற உறுப்பினர்களாக சுப்பராவ், அந்தோணி, சரவணன், அலெக்ஸ், சங்கர் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனிடையே சங்கத்தின் கணக்காய்வாளர்களாக சந்திரன், தாஸ், சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அண்மையில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர் மற்றும் விலாயா மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் 64 குழுக்கள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டி வெற்றி பெறுவதற்கு பத்துமலை, குணசேகரன், கென்னத் கண்ணா உட்பட அனைத்து உறுப்பினர்களும் பெரும் ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

