

புத்ரா ஜெயா ஆக 28-
தன்னலமற்ற சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் சிலாங்கூர் – விலாயா மாநில காது கேளாதோர் சங்கத்திற்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று 10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
காது கேளாதோருக்கு உதவும் வகையில் சிலாங்கூர் – விலாயா மாநில காது கேளாதோர் சங்கம் உதவி புரிந்து வருகிறது.
குறிப்பாக காது தெளிவாக கேட்கும் கருவியை வாங்கி தந்து உதவி வருகிறது.
பல நல்லுள்ளங்கள் உதவியோடு நூற்றுக்கணக்கான மக்களுக்கு சிலாங்கூர் – விலாயா மாநில காது கேளாதோர் சங்கம் பல ஆண்டுகளாக உதவியிருப்பதாக அதன் தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
இந்நிலையில் சிலாங்கூர் – விலாயா மாநில காது கேளாதோர் சங்கத்தின் தலைவர் சண்முகம், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் அசோகன், கமிட்டி உறுப்பினர்களான சங்கர், தனபாலன், மோகன் ஆகியோர் மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இவர்கள் முன் வைத்த கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியுதவி மூலம் காது கேளாதோர் பலருக்கு சங்கத்தின் மூலம் உதவி புரிய முடியும் என்று அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
தக்க தருணத்தில் எங்களுக்கு பேருதவி புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் சண்முகம் தெரிவித்தார்.

