கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பிக்கிறார்!

புத்ரா ஜெயா ஆக 29-
கோலசிலாங்கூர் நகரில் 4 ஆவது மைலில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் பொறுப்பாளர்கள் இன்று புத்ரா ஜெயாவில் மனிதவள அமைச்சர் வ சிவகுமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.

ஆலயத் தலைவர் பரமசிவம், உதவித் தலைவர் யூகனேஸ் ராஜ், செயலாளர் அவனேஸ், பொருளாளர் உதயகுமார் உட்பட பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கடந்த 1900 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தை நகரத்தார் கட்டி வழிபட்டு வந்தனர்.

2016 ஆம் ஆண்டில் இளைஞர்கள் இந்த ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்தி முறைப்படி ஆர்ஓஎஸ் -இல் பதிவு செய்தனர்.

இப்போது இந்த ஆலயம் பழனி ஆண்டவர் திருக் கோவில் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.

ஐந்து லட்சம் வெள்ளியில் திருப்பணி செய்யப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நன்னீராட்டு பெருவிழா செப்டம்பர் 17 ஆம் தேதி காலையில் விமரிசையாக நடைபெறவுள்ளது.

மேலும் ரதத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனிதவள அமைச்சர் சிவகுமார் இந்த ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற ஆதரவு தரும்படி ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.

ஆலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles