


கோலாலம்பூர், ஆக. 29-
கிழக்குகரை திரெங்கானு மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சொக்சோ புனர்வாழ்வு பயிற்சி மையம் அதிநவீன மற்றும் உயர் தொழில்நுட்பம் நிறைந்தவை.
இந்த மையம் 160 படுக்கைகளை கொண்டது. மேலும் சிறந்த தரமான சேவையை செயல்படுத்தும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று தெரிவித்தார்.
இந்த மையம் கிழக்கு கடற்கரை மாநிலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புனர்வாழ்வு மையத்தின் முன்மொழியப்பட்ட மேம்பாட்டிற்கு Yayasan DiRaja Sultan Mizan (YDSM) அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் Sultan Mizan Zainal Abidin ஒப்புதலைப் பெற்றதற்கு நன்றி.
99 ஆண்டுகள் குத்தகை மீதான ஓப்பந்தம் திரெங்கானு Sultan Mizan Zainal Abidin முன்னிலையில் YAYASAN DIRAJA SULTAN MIZAN (YDSM) மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு இடையே இன்று கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் திரெங்கானு சுல்தான் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், திரெங்கானு சுல்தானின் அபரிமிதமான ஆதரவு பெரும் உற்சாகத்தைத் தருகிறது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் குறிப்பிட்டார்.
சொக்சோ மறுவாழ்வு மையம் 2014 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சராசரியாக பெறப்பட்ட மொத்த புகார்களில் 15 முதல் 20 விழுக்காடு கிழக்கு கடற்கரை மண்டல விபத்துக்கள் மற்றும் தொற்றாத நோய்களின் எண்ணிக்கையாகும்.
ஆகவே, இங்கு கட்டப்படும் புனர்வாழ்வு மையம், திரெங்கானு மக்களின் சமூகப் பொருளாதாரத் தேவைகளை இலக்காகக் கொண்டு உடல் மற்றும் தொழில்சார் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் 160 படுக்கைகள் என மதிப்பிடப்பட்ட திறன் கொண்ட அதிநவீன மற்றும் உயர் தொழில்நுட்ப மறுவாழ்வு மையமாக இருக்கும்.
SOCSO மறுவாழ்வு மையத்தின் முன்முயற்சியானது விபத்துக்கள் அல்லது நோய் காரணமாக ஊனமுற்ற தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான முயற்சியாகும்.
இது வெளிப்படையாக தேசிய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
திரெங்கானு மாநிலத்தில் புனர்வாழ்வு மையம் மக்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இந்த ஒப்பந்தம் நிறைவேறியதில் அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசியாவில் உள்ள தொழிலாளர்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் மனிதவள அமைச்சகம் எப்போதும் அக்கறையும் உறுதியும் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

