மனிதவள அமைச்சர் வ.சிவகுமாரின் மெர்டேக்கா தின வாழ்த்துச் செய்தி

புத்ரா ஜெயா ஆக 30-
நாளை வியாழக்கிழமை மலேசிய சுதந்திர தினத்தை “மெர்டேக்கா” என்ற முழக்கத்துடன் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல!

இந்த சுதந்திரம் எவ்வாறு கிடைத்தது என்பதனை எதிர்காலத் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிகவும் சவாலான இந்த காலகட்டத்தில் மலேசியர்கள் மிகவும் விவேகமுடன் செயல்பட வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசிய நாடு உலகளவில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றுவதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.

மெர்டேக்கா தினக் கொண்டாட்டத்தில் அனைத்து மலேசியர்களும் பங்கேற்று தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த அருமையான தருணத்தில்
அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த தேசிய தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles