
புத்ரா ஜெயா, ஆக. 30-
First Solar (Malaysia) Sdn. Bhd நிறுவனம் HighTech
Park, Kulim, Kedah-வில் இயங்குகிறது. உற்பத்தி தொழிற்சாலையான இந்த நிறுவனம் அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஃபர்ஸ்ட் சோலார் இன்க் (Inc di Arizona, Amerika Syarikat) நிறுவனத்திற்கு சொந்தமானது.
உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமே இருப்பினும், நான்கு ஒப்பந்ததாரர்கள் (kontraktor) மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்ததாரர்களின் முதலாளிகள் அந்நியத் தொழிலாளர்களின் பாஸ்போர்ட் மற்றும் மற்றும் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட First Solar (Malaysia) Sdn. Bhd நிறுவனம் நடவடிக்கை எடுத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் ஊதியத்தை திருப்பித் தரும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மலேசிய தொழிலாளர் துறை (JTKSM) இன்னும் சம்பந்தப்பட்ட First Solar (Malaysia) Sdn. Bhd நிறுவனத்திடம் இருந்து தேவையான தகவல்களைப் பெறவில்லை.
இது தொடர்பில் கூடுதல் தகவல்களை கொடுக்க அமெரிக்காவின் கார்ப்பரேட் அலுவலகத்தின் அனுமதி தேவை.
மேலும் நியமிக்கப்பட்டுள்ள 4 நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் தொடர்பான எந்த தகவலும்.
இந்த கட்டாய தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சு (KSM) மேலும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.
மனிதவள அமைச்சு அனைத்துத் துறைகளிலும் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினையைத் தீர்க்க உறுதிபூண்டுள்ளது.
கட்டாயத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் எந்த தரப்புடன் சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம் என்று அவர் சொன்னார்.
நாட்டின் தொழிலாளர்களின் நல்லிணக்கத்தையும் நலனையும் மனிதவள அமைச்சு உறுதி செய்யும்.
அந்த வகையில் நாட்டில் கட்டாய தொழிலாளர்கள் நடைமுறையை ஒழிக்கப்பட வேண்டும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்

