

கோலாலம்பூர், ஆக.30-
தேசம் ஊடகம் 13ஆம் ஆண்டுகளை நிறைவு செய்து விட்டு 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது கண்டு மகிழ்ச்சியடைவதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்ர.
கடந்த 31.8.2009இல் நாட்டின் சுதந்திர தினத்தில் ஒரு வார செய்திப் பத்திரிகையாக தொடங்கப்பட்ட தேசம் மாறுபட்ட கோணத்தில் தினசரி செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருவது பாராட்டத்தக்கது என்று மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
மக்கள் எல்லா நிலைகளிலும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள பலதரப்பட்ட தினசரி செய்திகளை வழங்கி வருகிறது. அதேநேரத்தில் தினமும் சிறப்பு ஆய்வு செய்திகளையும் தேசம் ஊடகம் வழங்கும் நிலையில் மனிதவள அமைச்சின் செய்திகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாக அமைச்சர் சிவக்குமார் சொன்னார்.
தேசம் ஊடகம் 13 ஆண்டுகள் நிறைவு பெற்று 14ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் தனது செய்தி தரத்தை மேம்படுத்தி கொண்டுள்ளது. 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தேசம் ஊடகம் இலக்கை அடைய வேண்டும் தேசம் ஊடகம் அடைந்துள்ள வெற்றி சாதாரண ஒன்றல்ல.
இந்த வெற்றிச் சிகரத்தை தொடுவதற்கு 14 ஆண்டுகள் உழைத்திருக்கிறார் தேசம் ஊடகத்தின் தோற்றுநர் குணாளன் மணியம்.
கடந்த 31.8.2009இல் நாட்டின் சுதந்திர தினத்தில் தேசம் பத்திரிகையை தொடங்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில்
இந்த ஊடகப் பயணத்தில் தாம் சந்தித்த பிரச்சினைகள், சவால்களை எதிர்கொண்டு செயலாற்றி வந்துள்ள தேசம் ஊடகம் மற்றும் அதன் தோற்றுநர் குணாளன் மணியம் அவர்களுக்கும் மனிதவள அமைச்சர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மக்களோடு தேசம்…தேசத்தோடு மக்கள்…மக்களின் தேர்வு தேசம்

