


கோலாலம்பூர் ஆக 31-
நாட்டில் தலைசிறந்த எழுத்தாளர் இராகவன் சுப்பையாவின் பனி போர்த்திய பூமியிலே பயண நூலை மனிதவள அமைச்சர்
வ சிவகுமார் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
வாசிக்கும் பழக்கம்
மலேசியர்கள் மத்தியில்
அதிகரிக்க வேண்டும் என்று அவர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.
இன்று பிரிக்பீல்ட்ஸ் ஓய்எம்சிஏ மண்டபத்தில்
நூல் ஆசிரியர் இராகவன் சுப்பையாவின்
பனி போர்த்திய பூமியிலே பயண நூல் வெளியீட்டு விழா வில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
இராகவன் சுப்பையாவின் இந்த பனி போர்த்திய பூமியிலே பயண நூல் மிகவும் பாராட்டுக்குரியது.
தனது பயண அனுபவங்களை இந்த நூலில் அவர் முழுமையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்..
தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த நூல் வெளிவந்திருக்கிறது.
தமது சார்பில் 10,000 வெள்ளி கொடுத்து நூல்களை வாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதாக அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு செய்தார்.
பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ். இராஜேந்திரன், தென்றல் ஆசிரியர் வித்யாசாகர், தமிழ் மலர் தொலைக்காட்சி ஆசிரியர் சன்சிவா, மக்கள் ஓசை ஆசிரியர் கு. தேவேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

