
ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் கொள்ளை அடிப்பதற்கு வாய்ப்பை
வழங்காதீர்கள்!
பத்து காஜா எம்பி சிவகுமார் வேண்டுகோள்
நாட்டின் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதற்கு வாய்ப்பை வழங்கி விடாதீர்கள்.
இது ஒரு முக்கியமான தேர்தல். நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றுவதற்கு மலேசியர்கள் துணிந்து போராட வேண்டும்.
நீதிமன்ற ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அம்னோ தலைவர்கள் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துகிறார்கள்.
இவர்கள் ஊழலில் இருந்து தப்பிக்க ஒருபோதும் வாய்ப்பு வழங்கக்கூடாது.
ஆகவே மலேசியர்கள் இந்த ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்ட துணிந்து வாக்களிக்க வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹராப்பான் அரசு மட்டுமே ஒரு நேர்மையான அரசாங்கத்தை வழிநடத்த முடியும் என்று அவர் சொன்னார்

