பொதுத் தேர்தலை தடுக்கும் சார்ல்ஸ் சந்தியாகோ மனுவை ரத்து செய்யக்கோரி அரசாங்கம் பதில் மனு

15ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதை தடுக்கும் வகையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளை பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீறியுள்ளதால் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதை தடுத்து நிறுத்த அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவர் தமது வழக்கு மனுவில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தை பிரதிவாதியாக
குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சார்ல்ஸ் சந்தியாகோ மனுவை தள்ளுபடி செய்ய கோரி அரசாங்கம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles