வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் குருகுலம் கல்வி திட்டத்திற்கு அமைச்சர் சிவகுமார் 20,000 வெள்ளி மானியம்!

புத்ரா ஜெயா செப் 22-
உலு சிலாங்கூர் மாவட்டத்தில் துடிப்புடன் செயல்பட்டு வரும் கிந்தா உலுசிலாங்கூர் சமூக நல இயக்கம் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு குருகுலம் கல்வி திட்டத்தின் மூலம் உதவி வருகிறது.

கெர்லிங்கில் குருகுலம் கல்வி மையத்தை அமைத்து அதன் மூலம் களும்பாங் இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு இந்த இயக்கம் பல வழிகளில் உதவி கரம் நீட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிந்தா உலுசிலாங்கூர் சமூக நல இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் 20,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

மனிதவள அமைச்சர் சிவகுமார் வழங்கிய நிதியுதவி மூலம் 16 இந்திய மாணவர்களுக்கு
உதவ முடியும் என்று கிந்தா உலுசிலாங்கூர் சமூக நல இயக்கத்தின் செயலாளர் கனகராஜா தெரிவித்தார்.

தக்க தருணத்தில் எங்களுக்கு பேருதவி புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கிந்தா உலுசிலாங்கூர் சமூக நல இயக்கத்தின் தலைவர் மோகன், துணை தலைவர் கிருபாகரன், பொருளாளர் பிரான்சிஸ், செயலாளர் கனகராஜா, உச்சமன்ற உறுப்பினர்கள் தினேஷ், அன்பரசன் ஆகியோர் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles