

பகாவ், செப் 23-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் SOCSO மறுவாழ்வு மையத்தின் CSR திட்டத்தின் திரு. கயராஜூ சுப்பையா அவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டில் வழங்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சர் சிவகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று அவரது இல்லத்தில் இந்த கட்டில் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் பயன்படுத்தக்கூடிய அனைத்து வசதிகளும் கொண்ட இந்த கட்டில் கயராஜூவுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
நேற்று மாலை 4.00 மணியளவில் நெகிரி செம்பிலான் பஹாவில் உள்ள அவரது இல்லத்தில் SOCSO மறுவாழ்வு மையக் குழுவினரால் அவருக்கு இந்த கட்டில் வழங்கப்பட்டது.
தக்க நேரத்தில் தமக்கு உதவி புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் மற்றும் சொக்சோ நிறுவனத்திற்கு கயராஜூ நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

