



கோலாலம்பூர் அக் 30-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கெப்போங் கெஅடிலான் தொகுதி ஏற்பாட்டில் 100 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.
கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தலைமையில் கெப்போங் டி பி.கே.எல். மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளி விழாவை
கெப்போங் கெஅடிலான் தொகுதி தலைவர் எம். ஜெயக்குமார், துணை தலைவர் எம். பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்வில் ஒரு குடும்பத்திற்கு 100 வெள்ளி வீதம் மொத்தம் 100 குடும்பங்களுக்கு 10,000 வெள்ளி வழங்கப்பட்டது.
மேலும் Kepong Tara Foundation கல்வி மையத்திற்கு மித்ரா மூலம் 10,000 வெள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பி-40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாரா அறவாரியம் இலவச கல்வியை வழங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கெப்போங் கெஅடிலான் ஏழை எளிய மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டும் நூறு குடும்பங்களுக்கு பேருதவி புரிந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேசத்தில் ஒரு துடிப்பு மிக்க தொகுதியாக கெப்போங் கெஅடிலான் விளங்குகிறது.
இம்முறை மித்ரா சார்பில் ஒரு லட்சம் வெள்ளி மானியம் கிடைத்திருப்பது மூலம் கெப்போங் தொகுதியில் உள்ள மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்க முடியும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.

