நெகிரி ஜெம்புல் இந்தியர் சமூக நல இயக்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளி மானியம்

கோலாலம்பூர் நவ 2-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வரும் ஜெம்புல் இந்தியர் சமூக இயக்கத்திற்கு மனித வள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று 10,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

கடந்த இரண்டு வருட காலமாக ஜெம்புல் வட்டார மக்களுக்காக பல பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளை இந்த இயக்கம் நடத்தி வருகிறது.

அது மட்டும் இன்றி Jempol வட்டார தமிழ் பள்ளிகளுக்கும் நிதி உதவி செய்துள்ளது.

பொங்கல் மற்றும் தீபாவளி நிகழ்ச்சிகளையும் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பாடு செய்துள்ளது.

இதன் வழி பல மாற்றுத் திறனாளிகளும் தனித்து வாழும் தாய் மார்களும் பயன் பெற்றுள்ளனர் என்று ஜெம்புல் இந்தியர் சமூக நல இயக்கத்தின் தலைவர் தலைவர் : அசோக்குமார் தெரிவித்தார்.

ஜெம்புல் இந்தியர் சமூக நல இயக்கம் தொடர்ந்து துடிப்புடன் செயல்பட மனித வள அமைச்சர்
வ. சிவகுமார் 10,000 வெள்ளி வழங்கியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று இயக்கத்தின் தலைவர் அசோக் குமார்,
செயலாளர் : சுப்ரமணியம் மற்றும்
பொருளாளர் முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.

மனிதவள அமைச்சர் சிவகுமார் அமைதியான முறையில் இந்திய சமுதாயத்திற்கு பல உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது என்று அவர்கள் தெரிவித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles