
புத்ரா ஜெயா, அக் 3-
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 5 ஆம் ஞாயிற்றுக்கிழமை Balairaya Pengurusan Komunity Kampung (MPKK) Kampung Melayu Wira Damai Batu Caves, Daerah Gombak Selangor என்ற இடத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஜெலாஜா மடானி நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை மனிதவள அமைச்சர்
வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராயுடு உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp, சொக்சோ, டேலாண்ட் கோர்ப், நியோஸ், மனிதவள மேம்பாட்டு கழகம் போன்ற நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெறுகிறது.
வேலை வாய்ப்பு கண்காட்சி, இலவச மருத்துவ பரிசோதனை, தொழில் திறன் பயிற்சிகள் இந்த நிகழ்வில் இடம் பெற்றுள்ளது.
பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

