உதவித்தொகை நிறுத்தம் – அரசாங்கம் இந்தியச் சமுதாயத்தை புறக்கணிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்காதீர்!!

ஈப்போ,நவ01:

கோழிக்கான உதவித்தொகையை அரசாங்கம் நிறுத்தியிருப்பதை தொடர்ப்புப் படுத்தி அரசாங்கம் இந்தியச் சமுதாயத்தை புறக்கணிப்பது போலவும் பலி வாங்குவது போலவும் உண்மைக்கு புறம்பான தோற்றத்தை ஏற்படுத்தும் இரு தமிழ்ப்பத்திரிக்கைகலின் செயலை பேரா மாநில இந்திய நலவாழ்வு பிரிவுக்கான ஆட்சிகுழு உறுப்பினர் அ.சிவநேசன் கடுமையாக கண்டித்தார்.

தீபாவளி பெருநாள் காலத்தில் உதவித்தொகை நிறுத்தம் கோழி விலையை அதிகரிக்க செய்யும் என பத்திரிக்கை தர்மத்தையும் மீறி உண்மைக்கு புறம்பான ஒன்றை உருவகப்படுத்தும் முயற்சியை சம்மதப்ப இரு தமிழ்ப்பத்திரிக்கைகளும் மேற்கொள்வதாக சாடினார்.

ஆனால்,மலாய் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் கோழி இறைச்சியின் விலை குறையலாம் எனவும் விலை நிலைநிறுத்தப்பட சாத்தியம் இருப்பதாகவும் மக்களிடையே உண்மையை எடுத்துரைக்கின்றனர் என்றார்.

தமிழ்ப்பத்திரிக்கைகள் தங்களின் வியபார நோக்கத்திற்காக இந்தியச் சமுதாயத்திடம் உணர்ச்சியை தூண்டி மக்களின் கவனத்தை திசை திருப்புவதோடு மக்களுக்கான அரசாங்கமாய் இயங்கி வரும் அரசின் இந்தியச் சமுதாயம் விரக்தி கொள்ளும் சூழலை தூண்ட முற்படுவதாகவும் நினைவுறுத்தினார்.

மேலும்,சந்தையில் ஒரு பொருளின் தேவை குறையும் போதும் அது இல்லாமல் போகும் போதும் தான் விலை உயரும் என்பது இயல்பானது.குறிப்பாக இந்தியா அந்நாட்டிலிருந்து அரிசி மற்றும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்த நிலையில் விலை ஏற்றம் இயல்பாகவே நிகழ்ந்தது என்றார்.

ஆனால்,நடப்பில் கோழியின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது.கோழி இறைச்சி பற்றாக்குறை ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லாத சூழலில் உதவித் தொகை நிறுத்தத்தால் கோழி இறைச்சி விலை ஏற்றம் காணும் என்பது முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும் முடிச்சு போடுவதற்கு சமமானது என சிவநேசன் எச்சரித்தார்.

அதுமட்டுமின்றி,ஒவ்வொரு பெருநாள் காலம் நெருங்கும் போதும் குறிப்பாக 10 நாட்களுக்கு முன்னதாக 10 முதல் 15 வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் விலியை அரசு கட்டுப்படுத்தும்.அவ்வகையில் நாளை அரசாங்கம் சம்மதப்பட்ட பொருட்களின் விலை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உண்மை சூழல் இவ்வாறு இருக்க கோழி இறைச்சியின் விலை உயரலாம்,இந்தியச் சமுதாயம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கலாம் என அடிப்படை ஆதாரம் இல்லாத செய்தியை வெளியிட்டு மக்களை குழப்பும் நடவடிக்கைகளுக்கு சம்மதப்பட்ட இரு தமிழ்ப்பத்திரிக்கைகளும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைவுறுத்தினார்.

பத்திரிக்கை தர்மம்,அது சார்ந்த கடமைகளை தமிழ்ப்பத்திரிக்கைகள் செய்ய வேண்டுமே தவிர மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு அதில் குளிர் காயக்கூடாது என சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles