
மருத்துவ தேவைகள் அறிந்து மக்களின் தேவைக்கு ஏற்றபடி அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் மைஹீலர்டாக் (MyHealerDoc) செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவ துறையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மைஹீலர்டாக் செயலி மக்களுக்கு பெரிதும் பயனாகவும் உருதுணையாகவும் இருக்கும் என்று மைஹீலர்டாக் தோற்றுனர் ஜெகதீசன் தெரிவித்தார்.
அன்மையகாலமாக மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நீரழிவு நோயால் அதிகம் அவதிப்படுகின்றனர். பாதிக்கப்படும் மக்களுக்கு காயங்களினால் உடலில் பாகங்களை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இத்தகைய சிக்கல்களை குறைக்கும் வகையில் மைஹீலர்டாக் செயலின் மூலம் பொதுமக்கள் தங்களின் தேவையான மருத்துவ செவையை பெற்றுக்கொள்ள முடியும்.
மைஹீலர்டாக் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் மருத்துவர், சிகிச்சைகள் என மக்களுக்கு வேண்டிய மருத்துவ வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என ஜெகதீசன் குறிப்பிட்டார்.

மேலும் அம்புலன்ஸ், மருந்தகம் போன்ற வசதிகளும் இந்த செயலி உள்ளடிக்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அறிமுகப்படுத்தியிருக்கிம் இந்த செயலி தற்போதைக்கு சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் செயல்பாட்டில் இருப்பதாகவும் கூடிய விரைவில் நாடுமுழுவதும் பயன்பாட்டிற்க்கு வரும் என்றார் ஜெகதீசன்.
இன்று காலை சைபெர்ஜெயாவில் நடைபெற்ற மைஹீலர்டாக் செயலி அறிமுக நிகழ்ச்சியில் மைஹீலர்டாக் ஆலோசகர் டத்தோ சிவகுமார் தலைமையேற்றார். மேலும் நிகழ்ச்சியில் டாக்டர் எஸ்.ஆர் முத்து, நம்பிக்கை குழும மேலாளர் தயாளன் சண்முகம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

