மின்சார வாகன பராமரிப்பு துறையில் இந்திய இளைஞர்களுக்கு பயிற்ச்சி!

திவெட் எனப்படும் தொழில்திறன் மேம்பாட்டு கல்விக்காக மித்ரா 11.46 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அதன் நடவடிக்கை குழு தலைவர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

அதில், மின்சார பராமரிப்பு பயிற்ச்சிக்காக 2.875 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு 11,500 ரிங்கிட் என 250 மாணவர்கள் இப்பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

திவெட் பயிற்ச்சிகளுக்காக மித்ரா ஒதுக்கியிருக்கும் தொகையின் மூலம் 1,000 இந்திய இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இதில் சுபாங்ஜெயாவில் எஸ்ஜி அகாடமி அதிநவீன வசதிகளுடன் மாணவர்களுக்கு இப்பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இவ்வேளையில் எஸ்ஜி கல்வி குழுமத்தின் தலைமை இயக்குநர் ஸ்ரீ கணேஸ் உட்பட அவர்தம் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.

மின்சார வாகனம் என்பது நமது எதிர்காலமாக உள்ளது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அந்த தொழில்நுட்பத்தில் நாம் கால் பதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த தொழில் துறையை பயின்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் முறையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles