குலசேகரன் தலைமையில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு – டத்தோஸ்ரீ சரவணனும் கலந்து சிறப்பிக்கிறார்!!

புந்தோங்,நவ03:

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தலைமையில் புந்தோங்கில் Sahabat Cinta Alam Kinta இயக்கத்தின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறவுள்ளது.

நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் வேளையில் அவரோடு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயரும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

நாட்டில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலோங்க வைக்கும் நிலையில் ஒருமைப்பாடு அரசாங்கத்தின் ஒற்றுமையையும் நிலைநிறுத்தும் வகையில் இந்த திறந்த இல்ல உபசரிப்பு தனித்துவ சிறப்பினை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி,இந்நிகழ்வில் இவ்வட்டாரத்தில் சிறுத்தொழில் செய்யும் இரு மகளிருக்கு வியபார உதவிப்பொருட்களையும் குலசேகரன் வழங்குகிறார்.

நல்லிணக்கத்தையும் இந்தியர்களின் ஒற்றுமையையும் மெய்பிக்கும் இந்த தீபாவளி திறந்த் இல்ல உபசரிப்பு புந்தோன்ஹ் ஐ.ஆர்.சி கிளாப் திடலில் நவம்பர் 4ஆம் தேதி
(சனிக்கிழ்மை) மாலை மணி 5.00 தொடங்கி நடைபெறவுள்ளது.

நாவிற்கு சுவையான உணவோடு ஆடல் பாடல் என இன்னிசை நிகழ்ச்சியோடு இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறவிருக்கும் நிலையில் புந்தோங்,ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதியை சார்ந்த பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறும் அதன் ஒருங்கிணைப்பாளர் வடிவுகரசி கேட்டு கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles