

கோலாலம்பூர் நவ 11-
மக்களுக்கும் அரசுக்கும் இடையே உறவு பாலமாக ஊடகவியாளர்கள் விளங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்கள் மூலம் எந்த வகையில் நன்மை பயக்கும் என்பது குறித்த தகவல்களை மக்களுக்கு ஊடகவியாளர்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதன் வழி அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் வெற்றி பெறும் வேளையில் மக்களுக்கு நன்மை அடைவார்கள் என்று அவர் சொன்னார்.
எச்ஆர்டி கோர்ப் ஏற்பாட்டில் அதன் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளருடன் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்டு மனிதவள அமைச்சர் சிவகுமார் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எச்ஆர்டி கோர்ப் நிறுவனம் மேற்கொண்டு வரும் தொழில் திறன் கல்வி தொடர்பான செய்திகளை அதிக அளவில் சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் படியும் அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

