மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் பேருதவி

கோலாலம்பூர் நவ 11-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் உறுப்பினர்களுக்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் பேருதவி புரிந்துள்ளார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp நிறுவனத்தின் மூலம் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 200 உணவுக் கூடைகளை அன்பளிப்பு செய்துள்ளார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் கு. தேவேந்திரன் இந்த உணவு கூடைகளை சங்க உறுப்பினர்களுக்கு முறையே வழங்கி இருக்கிறார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு உதவி புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு சங்கத்தின் சார்பில் கு. தேவேந்திரன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles