
ஜொகூர் பாரு, நவ. 12-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து பெருமக்கள் தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
மலேசிய திருநாட்டிலும் தீபாவளி கொண்டாட்டம் களைக் கட்டியிருக்கிறது.
ஆங்காங்கே நடைபெறும் பொது உபசரிப்புகளில் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜொகூர் மாநிலத்தில் பிரபலமான ஜசெக அரசியல் பிரமுகர் , ஜொகூர் மாநில ஜசெக சுகாதார பிரிவு இயக்குநர் மற்றும் இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான எம். கண்ணன் தமது இல்லத்தில் தீபாவளி உபசரிப்பை இன்று நடத்தினார்.
இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வாணிப தொழில் துறை, முதலீட்டு துறை துணை அமைச்சர் சின் தோங் உட்பட ஜொகூர் ஜசெக தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

