


ஈப்போ நவ 13-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தனது பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் ஆயிரம் பேருக்கு உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
மெங்கெலும்பு சட்டமன்ற தொகுதியில் 300 பேருக்கும் ஜெலாபாங் சட்டமன்ற தொகுதியில் 350 பேருக்கும் துரோனோ சட்டமன்றத் தொகுதியில் 350 பேருக்கும் இந்த உணவு கூடைகள் வழங்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.
தீபாவளியை கொண்டாடி மகிழும் வசதி குறைந்த மக்களுக்கு இந்த உணவு கூடைகள் நேரடியாக வழங்கப்பட்டது.
உணவுக் கூடைகளை பெற்றுக் கொண்ட மக்கள் அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
பெருநாள் காலங்களில் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு பல வகைகளில் அமைச்சர் சிவகுமார் உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இவ்வாண்டும் வசதி குறைந்த மக்களுக்கு அவர் உதவிகளை வழங்கி இருக்கிறார்.
மனிதவள அமைச்சர் சிவகுமாரின் அரசியல் செயலாளர் ஸ்டீவன் சாவ் மூலமாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளன.

