அமைச்சர் சிவகுமார் தலைமையில் மனிதவள அமைச்சின் தீபாவளி உபசரிப்புமிகவும் விமரிசையாக நடைபெற்றது!

புத்ரா ஜெயா நவ 13-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் இன்று புத்ரா ஜெயா மேரியட் ஹோட்டலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த தீபாவளி உபசரிப்பில் HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட், சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ அஸ்மான், மனித வள அமைச்சின் துணை தலைமை செயலாளர் டத்தோ நோரிசான், டேலாண்ட் கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி தோமஸ், நியோஸ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் தலைவர் அயோப் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் சார்பில் சொக்சோ சந்தாதாரர்களுக்கு இழப்பீட்டு தொகையும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது.

நிதியை பெற்றுக் கொண்டவர்கள் மனித வள அமைச்சர் சிவகுமார் மற்றும் சொக்சோவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

நாட்டில் புகழ்பெற்ற பாடகர் சந்தேஸ் பாடல்களைப் பாடி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles