உலகத்தின் பார்வையில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் முன்மாதிரியான நாடுகளில் ஒன்றாக மலேசியா மாறும்!அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

சுபாங் ஜெயா,
மலேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று 41 ஆவது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விருது வழங்கும் விழா இன்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தலைமையில் சன்வே ரிசோர்ஸ்ட் டில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார திட்டத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக 41ஆவது தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார விருது வழங்கும் விழா வழங்கப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறேன்.

மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்புகளைத் தடுக்கவும் சர்க்கரை உட்கொள்ளவதை தவிர்ப்பதன் மூலம் தொழிலாளர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.

இரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் எடை மற்றும் மிக முக்கியமான விஷயம் புகைபிடிப்பதை நிறுத்துவது நல்லது என்றார் அவர்.

2022 ஆம் ஆண்டில் பணியிடத்தில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொழில் சார்ந்த நோய்களின் விகிதத்தைக் குறைக்கும் ஒரு நிறுவனத்தின் திறனை அடிப்படையாகக் கொண்டு விருதுக்கான செயல்திறன் மதிப்பீடாக இந்த விருந்தளிப்பு விழா அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles