
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் நாட்டின் தலையெழுத்தை எழுதப் போகும் முக்கிய துருப்பு சிட்டாக இளம் வாக்காளர்கள் விளங்குகிறார்கள்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் முறையாக பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.
ஒரு ஊழல் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து இளம் வாக்காளர்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றலாம் என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் தெரிவித்தார்.
ஆகவே தேர்தல் நடைபெறும் தேதியில் இளம் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

