
நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகளை எதிர் நோக்கி இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பொதுத் தேர்தலை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டார்கள்.
பருவமழை காலத்தில் மக்கள் அவதிப்படுவார்கள் என்பதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.
ஊழலில் இருந்து தப்பித்துக் கொள்ள அவர்கள் துடித்து கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நாட்டை ஆள வாய்ப்பு வழங்கினால் மேலும் கொள்ளை அடிப்பார்கள்.
இவர்களுக்கு பாடம் புகட்ட இந்த பொதுத் தேர்தலே சரியான நேரம் என்பதால் வாக்காளர்கள் திரண்டு வந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

