
மூடா கட்சியின் பேராக் மாநில தாப்பா தலைவராக இருக்கும் வி.கே.கே. இராஜசேகரன் தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செண்டிரியாங் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் கெஅடிலான் சார்பில் அதன் உதவித் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுகிறார் என்று கூறப்படுகிறது.
தாப்பா மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் வி.கே.கே. இராஜசேகரனை செண்டிரியாங் சட்டமன்ற தொகுதியில் களம் இறக்க மூடா கட்சி உறுதி பூண்டுள்ளது என்று கட்சி வட்டாரம் கோடி காட்டுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் செண்டிரியாங் சட்டமன்ற தொகுதியில் பெர்சத்து வேட்பாளர் டத்தோஸ்ரீ அமுசு போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் பேராக் மாநில மந்திரி பெசாராக பதவி யேற்றார்.
இம்முறை தாப்பா மற்றும் செண்டிரியாங்கில் இரு இந்தியர்கள் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய முன்னணி கோட்டை என்று வர்ணிக்கப்படும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் ம இகா சார்பில் டத்தோஸ்ரீ எம் சரவணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இம்முறை நாடே எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் களமாக தாப்பா நாடாளுமன்றம் விளங்குகிறது.

