டிசம்பர் முதல் 30 நாட்களுக்கு இந்தியா, சீனாவுக்கு விசா விலக்கு! பிரதமரின் அறிவிப்பை வரவேற்றார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர் நவ 27-
கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா விலக்கு பயணக் கொள்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்பதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று தெரிவித்தார்.

டிசம்பரில் இருந்து அமலுக்கு வரும் இந்தக் கொள்கையானது, இரு நாடுகளைச் சேர்ந்த வருகையாளர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்குவதற்கு அனுமதிக்கும்.

இந்த முயற்சியானது சுற்றுலாவை மேம்படுத்தவும், அதே வேளையில் மேற்கூறிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்கவும் மலேசியாவின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு மூலம் டிசம்பர் மாதம் மலேசியாவுக்கு வருகை புரியும் சீனா மற்றும் இந்தியா சுற்றுப் பயணிகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles