ஆதி சிவநேத்ரா ஆசிரமத்தில்அஸ்வினி நட்சத்திர சிறப்பு பூஜை

பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் அமைந்துள்ள ஆதி சிவநேத்ரா ஆசிரமத்தில் சனி புரதோஷ நன்னளில் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.

கார்த்திகை தொடக்க நாளில் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக ஆசிரமத்தின் நடத்துனர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நன்னாள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வழிப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிறப்பு பூஜையில் செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் மாரியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த ஆசிரமத்தில் ஜாதகம் பார்ப்பது, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை களைய ஆலோசனை வழங்குவது, கருட புராணம், பகவத் கீதை பாடிப்பினைகள் வகுப்புகள், அன்னதானம் வழங்குதல்
என பல பயனுள்ள விஷயங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு, ஜாதகத்திற்கு ஏற்ப ஏற்படும் பிரச்சினைகளுக்கான பரிகாரங்களை வழங்கும் சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

எனவே, மன குழப்பதில் இருப்பவர்கள், பிரச்சினைக்கான தீர்வினை தேடுபவர்கள், சாஸ்திர படி பரிகாரங்களை செய்ய விரும்புவர்கள் தங்களின் ஆசிரமத்தை நாடலாம் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles