மனிதவள மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் குழுவின் தலைவராக Tansri DATUK Ter Leong Yap நியமனம்!

மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் (பிஎஸ்எம்பி) இயக்குநர்கள் குழுவின் தலைவராக டான்ஸ்ரீ டத்தோ டெர் லியோங் யாப்பை நியமிப்பதாக மனிதவள அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

Tansri DATUK Ter Leong Yap ஒரு தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

பல்வேறு துறைகளில்
30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள தொழில் ஆர்வலர்கள் மத்தியில்
தொழில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

வியாபாரத்தில் சுறுசுறுப்பாக இருப்பதோடு, வெளிப்படையாகவும் பேசுபவர்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூகத்தின் சமூக நலன் பிரச்சினைகளுக்காக போராடியவர்.

டான்ஸ்ரீ டத்தோ டெர் ஒற்றுமையின் தூதராக முடிசூட்டப்பட்டவர்.

அவர் தற்போது சன்சூரியா பெர்ஹாட்டின் செயல் தலைவராக உள்ளார்.

அவரது தலைமையில்,
சன்சூரியா பெர்ஹாட் ஒரு சிறிய நிறுவனத்திலிருந்து ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளார் .

ரியல் எஸ்டேட் மேம்பாடு, சுகாதாரம், கல்வி, கட்டுமானம் மற்றும் பல தொழில்களில் இவர் கால் பதித்துள்ளார்.

மேலும், மலேசிய பங்கு சந்தையில் சன்சூரியாவையும் பட்டியலிட அழைத்து சென்றவர்.

டான்ஶ்ரீ டத்தோ தேர் லியோங் யாப் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர்கள் குழுவின் ததலைவராக நியமிக்கப் பட்டுள்ளளதை மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் வரவேற்றுள்ளார்.

இவரின் நியமனம் HRD Corp இன் இயக்குநர்கள் குழுவுக்கு மதிப்பு சேர்க்கும்.

மேலும் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles