

சுபாங் ஜெயா, டிச 6-
நாம் அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து நாட்டின் உணவகத் துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பாடுபடுவோம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக
அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மலேசியாவை பிராந்தியத்தில் முன்னணி சமையல் இடமாக மாற்றிக் காட்டுங்கள்.
மலேசிய உணவகங்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு இந்த இலக்கை அடைய பாடுபட வேண்டும் என்றார் அவர்.
பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு கூட்டத்தை அமைச்சர் சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் .
PRIMAS தனது இலக்குகளை அடைய மனிதவள அமைச்சுடன் இணைந்து மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட முடியும் என்றார் அவர்.
தொழிலாளர் திறன்கள், தரமான பயிற்சிகள்,
நிலையான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும்.
இது ஊழியர்களுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல்,
உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்த உதவும்.
தொழில்நுட்பம் அதிகரித்து வருகிறது என்பதை நானும் நீங்களும் உணர முடியும்.
இந்தத் துறையில் மிகவும் முக்கியமானது, குறிப்பாக டிஜிட்டல் உணவு விநியோகமாகும்.
வணிக திட்ட மேம்பாட்டை விளம்பரப்படுத்த மார்க்கெட்டிங் உத்தி, சமூக ஊடகங்கள் இணையதளங்கள் மற்றும் பிற சந்தைப்படுத்துதல் முறைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலேசியாவுக்கான இந்தோனேசியா தூதர் ஹர்மானோ, பிரிமாஸ் கெளரவ தலைவர் டத்தோ ரெனா. இராமலிங்கம், பிரிமாஸ் தோற்றுநர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

